Follow by Email

வெள்ளி, பிப்ரவரி 13, 2015

மன்னார்குடி–ஜோத்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்கம்


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகருக்கு வாராந்திர ரெயில் இயக்கப்படும் என கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கடைசி இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதை, தற்போதைய பா.ஜனதா அரசும் உறுதி செய்தது.
வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு மன்னார்குடியில் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை சென்றடையும் இந்த ரெயில் அங்கிருந்து இரவு 7.55 க்கு புறப்பட்டு போபால், ஜெய்ப்பூர் வழியாக புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஜோத்பூரை சென்றடையும். அங்கிருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வரும் இந்த ரெயில் மாலை 6 மணிக்கு மன்னார்குடியை அடையும் ‘பகத்கீ கோத்தி எக்ஸ்பிரஸ்’ என இந்த ரெயிலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. (எண்:16864 மற்றும் 16863).
இந்த ரெயில் சேவையை நேற்று மாலை 6 மணிக்கு டெல்லியில் மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மன்னார்குடியில் நடைபெற்ற விழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், ஆட்சியர் மத.மதிவாணன், தஞ்சை எம்.பி. கு.பரசுராமன், நகராட்சி தலைவர் சுதா மற்றும் ரெயில்வே அலுவலர்கள் பங்கேற்றனர்.

திங்கள், டிசம்பர் 15, 2014

நெகிழவைக்கும் பாணந்துறை மெளலவியின் ஈமானிய உணர்வு

முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்க பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஏன், இஸ்லாத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற தோரணையில் நமக்குள்ளேயே மோதிக்கொள்கிறோம். இதனால் முஸ்லிம்கள் பல பிரிவுகளாக சிதறுண்டு தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. ஆனால், இந்தியாவில் இஸ்லாத்தை தெரியாத ஒரு முஸ்லிம் கிராமம் மதம் மாறுவதற்கு தயாரான செய்தி உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவிலுள்ள பல்வேறு குக்கிரமாங்களில் பள்ளிவாசல்கள் இல்லை. இதனால் அங்குள்ளவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி முழுமைாகத் தெரிவதில்லை. இந்தியாவில் ஒரு அமைப்பின் கணக்கெடுப்பின்படி பெரும்பாலான கிராமங்களில் பள்ளிவாசல்களே கிடையாது. இஸ்லாம் என்றால் என்வென்று கூட தெரியாமல் அங்கு முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். 

தமிழகத்தின் பல கிராமங்களில் குடிசைகளிலேயே பள்ளிவாசல்கள் இயங்கிவருகின்றன. இங்கு இஸ்லாத்தைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தக்கூடிய எவ்வித வசதிகளும் இல்லை. இவ்வாறனதொரு இடம்தான் திருச்சியை அடுத்துள்ள சமயபுரம் இருங்கலூர் உள்ளூராட்சிக்கு உட்பட்ட சோழமொழி கிராமம். இங்கு 35 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரியாது. மார்க்க கடமைகள் பற்றி தெரியாது. தொழுகை, நோன்பு பற்றியெல்லாம் தெரியாது. அதை அவர்கள் செய்து பார்த்திருக்கவும் மாட்டார்கள். பெயரவில் முஸ்லிம்களாக இருந்த இம்மக்களுக்கு இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கவில்லை.

சோழமொழி கிராம மக்கள் அனைவரும் குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அன்றாடம் கூலித் தொழில் செய்து தங்களது வயிற்றைக் கழுவி வந்தனர். அருகிலுள்ள கிறிஸ்தவ தோட்டமொன்றில் வேலைபார்த்தனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கிறிஸ்தவர்கள், எங்கள் மதத்துக்கு வந்துவிட்டால் இலவச வீடு உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து தருவதாகக் கூறி ஆசைகாட்டியுள்ளனர். மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்ந்துவரும் இவர்கள் தங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்குமென்ற நப்பாசையில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறத் தயாராகிவிட்டனர். 

இவர்கள் மதம் மாறப்போகும் செய்தியைக் கேள்வியுற்ற ஐக்கிய நலக் கூட்டமைப்பு (United Welfare Organization - UNWO) சோழமொழி கிராமத்துக்குச் சென்று, குறித்த முஸ்லிம் மக்களிடம் சென்று அவர்கள் மதம் மாறுவதற்கான காரணங்களை கேட்டனர். அங்குதான் ஆச்சிரியம் காத்திருந்தது. இஸ்லாத்திலிருந்து செல்வது பற்றி அவர்களுக்கு எவ்விதமான அறிவும் இல்லை. யார் உதவி செய்தாலும், அந்த மதத்துக்கு மாறும் அளவுக்கு அவர்களது மனநிலை இருந்தது. இஸ்லாத்திலிருந்து பிரிந்து செல்வதை அவர்கள் பாவமாக நினைக்கவில்லை. அங்கு பள்ளிவாசலோ, தொழுகையோ இருக்கவில்லை. இஸ்லாம் பற்றி அறிவின்மையால், அவர்கள் மதம் மாறுவதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.
உடனே விரைந்து செயற்பட்ட ஐக்கிய நலக் கூட்டமைப்பு அங்கு குடிசை ஒன்றில் பள்ளிவாசலை நிறுவியது. பிலால் ஜும்ஆ மஸ்ஜித் என்ற பெயரில் நிறுவப்பட்ட அப்பள்ளிவாசலில் ஐநேரத் தொழுகைகள், வாரம் இருமுறை மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் தப்லீக் ஜமாஅத் கஸ்துகள் என்பன நடைபெற்றன. இப்பள்ளிக்கு இமாமாக இருப்பவர் பாணந்துறையைச் சேர்ந்த அல்ஹாபிஸ் மெளலவி அப்துல் கரீம் (ரஹீமி) என்பவர். இவர் கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரியில் பட்டம்பெற்றவர். ஒருநாள் சமயபுரம் பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்த இவர், சோழமொழி மக்கள் இஸ்லாத்திலிருந்து மதம்மாறுவதைக் கேள்வியுற்று அவராகவே முன்வந்து பிலால் ஜும்ஆ மஸ்ஜிதில் இமாமாக பொறுப்பேற்றார்.

இவரது வருகையினால், சோழமொழி கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் ஐநேரமும் தொழுபவர்களாகவும், குர்ஆன் ஓதுபவர்களாகவும் மாறினர். இதுவே அவரது ஒரேயொரு குறிக்கோளாகும். அத்துடன் சோழமொழி கிராமத்தில் பள்ளிவாசல் கட்டவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். இப்பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றிவரும் அப்துல் கரீம் மெளலவிக்கு 300 இந்திய ரூபா மாத்திரமே சம்பளமாக வழங்கப்பட்டது.

இக்காலத்தில் இந்தியாவில் பணியாற்றும் பள்ளிவாசல் இமாம் ஒருவருக்கு குறைந்தது 10 ஆயிரம் இந்திய ரூபாவும் தங்குவதற்கான வீடு மற்றும் உணவு வசதிகளும் வழங்கப்படும். ஆனால், சோழிமொழி கிராமத்தின் இமாமான இலங்கையைச் சேர்ந்த மெளலவி அப்துல் கரீம் வெறும் 300 ரூபாவுக்கு பணியாற்றி வந்தார். பணத்தையும் மீறி அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்துவதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இன்றுவரை அதற்காக போராடி வருகிறார். இவரது சம்பளத்தைக் கேள்வியுள்ள ஐக்கிய நலக் கூட்டமைப்பு மாதாந்தம் இராண்டாயிரம் இந்திய ரூபாவை இவருக்கு வழங்கி வருகிறது. பாணந்துறையில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த இவர், மக்களை ஜாஹிலியக் காலத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக தனது வருமானத்தைப்பற்றி கவலைப்படாமல் துறவறம் பூண்டுள்ளார். இங்கு மாடிவீட்டில் வாழ்ந்தவர் தற்போது சோழமொழிக் கிராமத்தில் சிறிய ஓலைக் குடிசையில் இருக்கிறார். இவர் நினைத்திருந்தால் இலங்கையில் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், இறைவனின் திருப்பொருத்ததுக்காக அனைத்தையும் தியாகம் செய்துள்ளார். அத்துடன் திருமணம் செய்து அக்கிராமத்திலேயே வாழ்வதற்கும் உறுதிபூண்டுள்ளார்.

போதிய வருமானம் இல்லாமையினால் ஏனைய நேரங்களில் உணவகங்களில் வேலை செய்கிறார். அங்கேயே மூன்று வேளைக்கான உணவையும் உட்கொள்கிறார். இங்கு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் மெளலவிகளுக்கு மத்தியில் ஒரு இலங்கை இளைஞரின் தியாகத்தை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினர் விரும்பாவிட்டாலும், தனது ஆத்ம திருப்திக்காகன இவரது பணி தொடரவேண்டும்.

சோழமொழி கிராமத்தின் நிலைமைகளை வெளியுலகுக்கு எடுத்துக்கூறும் வகையில் ஓர் ஆவணப்படம் தயாரிக்க முடிவு செய்தனர். திருச்சி செய்தியாளர் சாஹுல் ஹமீது தலைமையிலான ஒரு குழு இதற்கென நியமிக்கப்பட்டது. ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள், கேரளா குமுளியைச் சேர்ந்த முஹம்மது ஜாவித், சாஹுல் ஹமீட், அன்ஸார் அலி, சுதர்சன் மற்றும் திருச்சி ஐக்கிய நலக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களான பீர் முஹம்மது, ஷனாவாஸ் ஆகியோர் சோழமொழி கிரமாத்துக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து அவற்றை ஆவணப்படமாகத் தயாரித்தனர்.
இந்த ஆவணப்படம் சென்னை தலைமை அலுவலகமாக ஐக்கிய நலக் கூட்டமைப்பின் பொது முகாமையாளர் பாருக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அங்கு பார்வையிட்ட 150க்கும் மேற்பட்டோர் கண்கலங்கிவிட்டனர். உடனடியாக அங்கு பள்ளிவாசல் கட்டுவதற்கு அல்ஹரைமன் நிதியம் பொறுப்பேற்றுக் கொண்டது. தற்போது அந்த பள்ளிவாசல் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அல்ஹரைமன் அமைப்பு பள்ளிவாசலை மட்டுமே கட்டிக் கொடுத்தது. பள்ளிவாசலைச் சுற்றி மதில், வுழூ செய்வதற்கான இடம், மலசலகூட வசதிகள் மற்றும் இமாம் தங்குவதற்கான வசதிகள் போன்ற செய்து கொடுக்கப்படவில்லை. இதனை சோழமொழி மக்களே செய்யவேண்டுமென குறித்த அமைப்பு கூறியுள்ளது. இதற்கான மொத்த செலவு 6 இலட்சம் இந்திய ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

சோழமொழி கிராமத்திலுள்ள மக்கள் ரமழான் காலங்களில் நோன்பு பிடிப்பது கூட தெரியாமல் இருந்தார்கள். அங்குள்ள இமாம் அப்துல் கரீம், ஏன் நோன்பு பிடிக்கவேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்ட பல விடயங்களை எடுத்துக்கூறிய பின்பே, அங்குள்ள மக்களுக்கு நோன்பைப் பற்றி தெரிந்தது. அதன்பின்னரே அவர்கள் நோன்பு நோற்றார்கள். தங்களது வறுமை காரணமாக அவர்கள் வெறும் தண்ணீரினால் நோன்பு திறந்தார்கள். இதனை அவதானித்த இமாம், நோன்பாளிகளுக்கு கஞ்சி வழங்கும் நோக்கில் ஆவணப்படம் தயாரித்த குழுவினரை நேரில் சந்தித்து பேசினார்.

விடயங்களை கேட்டறிந்த குழுவினர், நோன்பு காலங்களில் இப்தார் செய்வதற்காக கஞ்சி மற்றும் சிற்றுண்டி வகைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அங்குள்ள 35 குடும்பங்களுக்கும் நோன்புப் பெருநாள் தினத்துக்காக சாரம் மற்றும் பணமும் வழங்கப்பட்டன. ஹஜ் பெருநாள் தினத்தன்று 35 குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்துக்கு 6 பேர் வீதம் பிரியாணி சாப்பாடுகள் சமைத்துக் கொடுக்கப்பட்டன. இவ்வேளையிலேயே பள்ளிவாசலின் ஏனைய புனரமைப்பு வேலைகளை பூர்த்திசெய்து தருமாறு பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கென செய்தியாளர் சாஹுல் ஹமீது தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் ஹமீது முஹம்மது றிஸ்வான், அஜீஸுல்லா, மைதீன், முஹம்மது முஸ்தாக், ஆதில், முத்துப்பேட்டை முஹம்மது அனிபா, ஜியாவுல் ஹக் ஆகியோர் உள்ளிடங்குகின்றனர். இவர்கள் மூலமாகவே இந்தப் பள்ளிவாசலின் ஏனைய பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலமையை அறிந்தவுடன் நல்லுள்ளம் படைத்த ஒருசிலர் பொருளாகவும், பணமாகவும் உதவி செய்தனர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியிலுள்ள கைக்கூலி கைவிட்டோர் கழகம், இளம் அரிமா சங்கம் (லியோ கிளப்), ரோட்ராக்ட் கிளப் ஆகிய அமைப்பிலுள்ள மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு பள்ளிவாசலுக்குச் சென்று இந்தப் பள்ளியின் கட்டிட நிதிக்காக வசூல் செய்துவருகின்றார்கள். ஆனால், இப்பணி இன்னும் நிறைவடையவில்லை.  

இலங்கையில் ஒவ்வொரு வீதிக்கும் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சில ஊர்களில் பள்ளிவாசல்கள் இல்லாமையினால் இஸ்லாத்தைப் பற்றி தெரியாமலேயே மக்கள் மரணித்துப் போகிறார்கள். இதற்கு பதில் சொல்லவேண்டி கடமைப்பாடு நம் அனைவருக்கும் உண்டு. வெளிநாடு என்றாலும், இஸ்லாத்தைப் பற்றித் தெரியாமல் இருந்த ஜாஹிலியா காலத்து மக்கள் போன்றதொரு சமூகம் வாழ்வதைப் பார்த்துக்கொண்டு எம்மால் சும்மா இருக்கமுடியாது.

இறைவனின் திருப்பொருத்துக்காக அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் களமிறங்கியுள்ள பாணந்துறை சகோதரரின் கரங்களைப் பலப்படுத்துவதற்கு தம்மாலான முழு உதவிகளையும் செய்வோம். அவருடன் கைகோர்த்து நாமும் அந்த மக்களுக்கு உதவுவோம். பள்ளிவாசலின் ஏனைய பணிகளைச் செய்வதற்கு தம்மாலான உதவிகளை தாரளமாக வழங்குவோம்.

இதற்கு உதவிசெய்வதன் மூலம் இஸ்லாத்திலிருந்து பிரிந்துசெல்ல முற்பட்ட ஒரு சமூகத்துக்கு நல்வழி காட்டிய நன்மை நமக்கு வந்து சேரும். இதைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்கு பள்ளிவாசல் புனரமைப்புக் குழுவின் தலைவர் சாஹுல் ஹமீது (+919865124804) மற்றும் பாணந்துறை மெளலவி அப்துல் கரீம் (+919688698828) ஆகியோருடன் தொடர்புகொள்ள முடியும்.

(திருச்சியிலிருந்து சாஹுல் ஹமீது)

வெள்ளி, டிசம்பர் 12, 2014

(FLY DUBAI) துபை அரசுக்கு சொந்தமான "ஃபிளை துபை" பட்ஜெட் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் 31.03.2015 முதல் சென்னை – துபை இடையே விமான போக்குவரத்தை துவக்கவுள்ளது

துபை – சென்னை வான்வழித்தடத்தையும் சேர்த்து 46 நாடுகளில் தனது 89வது சேவையை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 43 போயிங் 737-800 ரக விமானங்களை கொண்டு இந்நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது.


எக்ஸ்பிரஸ் உட்பட ஏர் இந்தியாவின் சேவைகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வரும் நிலையில் இன்னொரு நாட்டின் அரசு நிறுவனம் தனது விமான எல்லைகளை விரிவுபடுத்தி வருவது நமது இந்திய அரசின் மெத்தனத்தையும் நிர்வாகக் கோளாறையும் சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது. ஏற்கனவே, நல்ல நிலையில் இயங்கி வந்த அபுதாபி - திருச்சி இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவையை ஊத்தி மூடியாச்சு என்பதும் கவனிக்கத்தக்கது.


மேலும், வளைகுடா நாடுகளிலிருந்து திருச்சிக்கு வர ஒன்வே டிக்கெட் விற்கும் விலையில் சென்னை மார்க்கமாக வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிவிடலாம் என்கிற அளவுக்கு டிக்கெட் விலை மிகவும் ஏற்றத்துடன் இருப்பது திருச்சிக்கு வளைகுடா நாடுகளிலிருந்து தனியார் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களின் பட்ஜெட் விமான சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.


சென்னையிலிருந்து செல்லும் ஏர் இந்தியா விமான சேவைகள் அனைத்தும் கேரளாவின் ஏதாவது ஒரு விமான நிலையத்தில் கட்டாயம் இறங்கி செல்லும் வகையில் மட்டுமே சேவைகளை அறிமுகப்படுத்தும் ஏர் இந்தியா நிறுவனம் ஏன் மதுரை திருச்சி விமான நிலையங்களை இணைத்தோ அல்லது திருச்சியிலிருந்து புறப்பட்டு உங்கள் விருப்ப கேரள விமான நிலையம் வழியாக கூட சேவைகளை அறிமுகப்படுத்தலாமே.


இதன் பயனாக ஏர் ஏசியா, டைகர் ஏர், மலிண்டோ ஏர், ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் போன்ற விமானங்கள் மூலம் திருச்சி வழியாக வளைகுடா நாடுகளுக்கு செல்ல விரும்பும் மலேசிய, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய டிரான்ஸிட் பயணிகளுக்கு வான்வழி சேவையை வழங்க முடியுமே. (ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இதை தான் கொழும்பு மார்க்கமாக செய்து கொண்டுள்ளதை கவனத்தில் கொள்க) இத்திட்டம் வெற்றிபெற்றால் இந்திய விமான நிறுவனங்களின் திருச்சி மார்க்க தென்கிழக்காசிய சேவைகளை பிலிப்பைன்ஸ் வரை விரிவுபடுத்த முடியும்.


அன்னியச் செலாவணியை நம் தேசத்திற்கு அள்ளித் தருபவர்கள் சார்பாக ஏக்கத்தை எழுதியாச்சு, அக்கறையுள்ள அதிகாரமுள்ள புண்ணியவான் யார் கண்ணிலாவது படுகிறதான்னு பார்ப்போம்!

http://flydubai.com/en/

வியாழன், அக்டோபர் 16, 2014

ஹிஜ்ரி என்றால் என்ன?


வையகம் வாழ் மக்கள் பல இனத்தவர்களாக, பல்வேறு மொழிகளைப் பேசுவோராக, நாட்டினால் வேறுபட்டவர்களாக வாழ்ந்து வருவதற்கமையவே பல சகாப்தங்களும் வழங்கிவிருக்கின்றன. இவ்வகையில் இஸ்லாமிய சகாப்தம் ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. சூரிய ஓட்டத்தை மையமாக வைத்து சகல சகாப்தங்களிலும் மாதங்கள் கணிக்கப்படுகின்றன.
ஆனால் இஸ்லாமிய சகாப்தமோ சந்திர ஓட்டத்தை அடிப்படையாக வைத்தே மாதங்களைக் கணிக்கின்றது என்பது ஒரு விஷேட அம்சமாகும். யார் எந்த சகாப்தத்தை கையாண்ட போதிலும் ‘பெளர்ணமி’, ‘அமாவாசை’ போன்றவற்றை அறிய வேண்டுமாயின், அதற்கு இஸ்¡மிய சகாப்த முறைதான் சாத்தியமாகிறது என்பதயும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் உலகின் எப்பகுதியில் வாழ்ந்த போதிலும், அந்தந்த நாட்டிலே பிரதி மாதமும் அமாவாசையின் பின் விண்ணில் தோன்றும் முதல் பிறையை வெற்றுக் கண்களால் காண்பதை அடிப்படையாகக் கொண்டே அம்மாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய ‘ஷரீஆ’ வெனும் சட்டத் தீர்ப்பின் தீர்க்கமான முடிவாகும்.
இதன் அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பல நூறு ஆண்டுகளாக நடைமுறையிலிருந்து வரும் தலைப்பிறை பார்த்து மாத ஆரம்பம் பற்றி முடிவு செய்து உத்தியோகபூர்வமாக ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் மகாநாடு கடந்த 06ம் திகதி திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹமீதிய்யா மண்டபத்தில் கூடியது.
உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன்ஜுமன் பாயிஸ் இ-ரஸா (மேமன் சங்கம்) மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பிரதிநிதிகள் ஜும்ஆப் பள்ளிவாசல்கள், தக்கியா, ஸாவியாக்களின் நிர்வாகிகள் ஆகியோர் பங்குபற்றிய இம்மாநாட்டில் நாட்டின் எப்பகுதியிலேனும் முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதற்கான தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெறாமையினால் புனித துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்து, 2010.01.07ம் திகதி செவ்வாய் மாலை புதன் இரவு புனித முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
ஹிஜ்ரி என்றால் என்ன? அது எதனை குறிக்கின்றது. ஹஜர என்ற அரபுப் பதத்திலிருந்து பிறந்தது தான் ஹிஜ்ரி, ஹிஜ்ரத் என்ற சொற்கள். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு குடிபெயர்ந்து செல்லுதல் என்பதே ஹிஜ்ரத் என்ற சொல்லின் பொருளாகும்.
இப்பூவுலகில் முதன் முதலாக ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர் இறைதூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே! அன்னார் தமது துணைவியார் ஸாராவுடன் ஹர்ரான் என்ற ஊரிலிருந்து பாலஸ்தீனம் சென்று அங்கு குடியேறினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் ஹிஜ்ரத் எனக் கருதப்படுகிறது.
தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அசைக்க முடியாத விசுவாசத்தோடு செயலாற்றுவதை வலியுறுத்தும் இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை காப்பதற்காக அந்த மார்க்கம் போதிக்கும் அறநெறிகளை தம்மில் நிலைநிறுத்தி தாமும் செயற்படுவதோடு, அவற்றைத் தரணியில் தழைக்கச் செய்வதற்காக நாடு துறப்பதையே ஹிஜ்ரத் என்ற பதம் விளக்கி நிற்கிறது.
இவ்வகையில் இறைவனுக்காக இறைதூதர் மீது கொண்டிருந்த தூய அன்பிற்காக இறைவனும் இறைதூதரும் ஈந்தளித்த ‘தீன்’ எனும் சன்மார்க்கத்திற்காக அன்றைய அரபகத்து முஸ்லிம்கள் தாம் பிறந்த புனித மக்கா நகரை மட்டுமல்ல தாம் பெற்ற மக்களை துறந்தார்கள். பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் துறந்தார்கள்.
ஈட்டிய சொத்துக்கள், ஒட்டிய வாகனங்கள், செழுமைமிக்க வாழ்க்கை அனைத்தையுமே அந்த அல்லாஹ்வுக்காக தியாகத்தோடு துறக்க முன்வந்தார்கள். சுமார் பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பயணத்தை தொடர்ந்தும், அதற்கு முன்னருமாக அணியணியாக நபித் தோழர்களும் தாம் பிறந்து வாழ்ந்த மக்கமா நகரைத் துறந்து 300 மைல் தொலைவிலுள்ள யத்ரிப் எனும் பெரு நகரை அடைந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது 53, அண்ணலாரின் வருகையையடுத்து அன்று வரை ‘யத்ரிப்’ என அழைக்கப்பட்ட அந்நகரம் ‘நபிகளாரின் நகரம்’ (மதீநதுன் நபி) என அழைக்கப்படலாயிற்று. இந்நிகழ்வையே ஹிஜ்ரத் பயணம் என்கிறோம். இவ்வாறான ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர்களே ‘முஹாஜிரீன்’கள் என அழைக்கப்படு கின்றனர். இந்த ஹிஜ்ரத்தை மையமாக வைத்தே இஸ்லாமிய ஆண்டு கணிக்கப்படுகிறது.
எனவே இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியேறிய ஆண்டாகிய கி.பி. 622ம் வருடம் ஹிஜ்ரியின் முதல் ஆண்டாகவும் அவ்வாறே ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் மாதம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் வருடத்தின் 12 மாதங்களில் புனித மிக்க மாதங்கள் என்று இறைவனால் சிறப்பாக சிலாகித்துக் கூறுப்பட்ட நான்கு மாதங்களில் இந்த முஹர்ரம் மாதம் முதலாவதாகத் திகழ்கிறது. அதுமட்டுமல்லாமல் புனிதம் எனும் அர்த்தத்தைப் பெயராகக் கொண்டு சிறப்பாகத் திகழ்வதும் இம்முஹர்ரம் மாதத்திற்குரிய தனிச் சிறப்பாகும். றஜப், துல்கஃதா, துல்ணிஜ்ஜஹ் ஆகிய மூன்றுமே புனித மிக்க ஏனைய மாதங்களாகும்.
இந்த மாதத்திற்குரிய சிறப்புக்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே புனித ரமழானை அடுத்து இரண்டாவது இடத்தை இம்மாதம் பெறுகிறது. நோன்புகளிலே ரமழான் மாத நோன்பை அடுத்து மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் புனித மிக்க முஹர்ரம் மாத நோன்பாகும் என்று இம்மாதத்தில் நோக்கப்படும் நோன்பின் சிறப்பைப் பற்றி இறைதூதர் (ஸல்) அவர்கள் போற்றிக் கூறினார்கள்.
எனவே வருடத்தின் முதல் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் முதற் பத்து நாற்களிலும் நோன்பிருப்பது ஸ¤ன்னத்தாகும். அதிலும் 9ம், 10ம் நாட்களாகிய ‘தாஸ¤ ஆ’, ‘ஆஷ¤றா’ ஆகிய இரு தினங்களிலும் நோன்பிருப்பது அதி விஷேட ஸ¤ன்னத்தாகும். இவ்விரு தினங்களும் முறையே டிசம்பர் 16ம் திகதி வியாழனும் 17ம் திகதி வெள்ளியாகும்.
ஒவ்வொருவரும் தமது ஆயுளிள் ஒரு ஆண்டு கழிந்துவிட்டது. ஒரு வயது கூடிவிட்டது. சென்ற ஆண்டில் நாம் எமக்காக, எமது சமுதாயத்திற்காக என்னதான் சாதித்துள்ளோம்? உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் ஈருலகிற்குமாக நாம் சாதிக்க வேண்டியவை யாவை? என்பன பற்றி சிந்தித்து செயற்படுவோமாக, சத்திய சன்மார்க்கமாம் இஸ்லாத்தை இறை தூதர் நபி (ஸல்) அவர்களும் அவர்களது வழி நடந்த நபித் தோழர்கள் மற்றும் சன்மார்க்கத்திற்காக இறை வழி நின்று மறை வழி தழுவி பற்பல தியாகங்களை புரிந்த தியாகிகள் ஆகியோரின் தூய வாழ்வை நாமும் பின்பற்றி, நாட்டிலே சகல இன மக்களின் நன் மதிப்பைப் பெற்ற நன்மக்களாக வாழ மலர்ந்துள்ள இப்புத்தாண்டில் உறுதிபூணுவோமாக.

ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2014

துபாயில் வேலை தேடும் தமிழர்களுக்காக குறைந்த வாடகையில் அறைகள் !துபாய் தமிழர் சங்கமம் 08.08.2014 அன்று மாலை 6.30 மணியளவில் தெய்ரா துபாய் ஈடிஏ ஸ்டார் ஹவுஸுக்கு பின்புறம் உள்ள ட்யூடிஏஎஸ் தமிழ் பேச்சலர் அறைகள் திறப்பு விழா துபாய் தமிழர் சங்கமத்தின் நிறுவனர் திரு. எக்ஸலன்ட் முருகேஷ் அவர்கள் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் திரு பாளை அப்துல் கரீம், கலை இலக்கிய பிரிவு செயலாளர் அதிரை திரு கவியன்பன் கலாம், தொழிற் பிரிவின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் திரு.முஸ்தபா நூரணி, ஐ.டி. பிரிவு தலைவர் திரு. ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. -


வில்லா நுழைவு வாயிலை துபாய் தமிழர் சங்கமத்தின் நிறுவனரின் திருமதி. ராமாமிர்தத்தம்மாள் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்தினார். டாக்டர் சுமதி முருகேசன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

அறை “அ” வை நத்தம் திரு சாதிக் அவர்களும்,
அறை”ஆ” வை காயல்பட்டினம் மௌலான மௌலவி திரு.சுலைமான் ஈடிஏ, மூன் டிவி ஆலிம் அவர்களும்
அறை “இ ” வை சாகுல் ஹமீது (துபாய் ஹெல்த் ஆதாரிட்டி) அவர்களும்
அறை “ஈ ” வை நெல்லை ஜிந்தா அவர்களும்
அறை “உ ” வை திரு கவியன்பன் கலாம் அவர்களும்
அறை “ஊ ” வை திரு பாளை அப்துல் கறீம் அவர்களும் திறந்து வைத்தனர் வில்லாவை பிடித்து கொடுத்த திரு சாதிக் அவர்களுக்கு ஒரு கிராம் தங்க காசும், மிகசிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் டியூடிஏஎஸ் தொழிற்பிரிவின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் திரு.முஸ்தபா நூரணி அவர்களுக்கு ஒரு கிராம் தங்க காசும் அன்பளிப்பாக அளித்து கௌரவிக்கப்பட்டது.

செவ்வாய், டிசம்பர் 31, 2013

dubai world reகின்னஸ் சாதனைக்காக துபாயில் நடந்த வானவேடிக்கை நிகழ்ச்சி
அமீரகம் துபாயில் ஆங்கில வருடம் 2014 ன் முதல் நாளான நேற்று இரவு உலக கின்னஸ் சாதனை படைக்கவேண்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் பால்ம்  ஜுமேரா ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.

இதனை மிஞ்சும் அளவுக்கு,  ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000  வெடிகளை வெடித்தனர். இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வானவேடிக்கையை நிகழ்த்தப்பட்டது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவிலும் இந்த வானவேடிக்கை நடத்தப்பட்டது.

திங்கள், அக்டோபர் 14, 2013

athikkadai R M Haneefa part 3

athikkadai R.M.Haneefa Part 2

குணங்குடி ஆர்.எம்.ஹனீபா பாகம் 1

வெள்ளி, மார்ச் 08, 2013

அமீரக அத்திக்கடை அசோசியேஷன்இன்று 08.03.2013 மாலை .5 00 மணிக்கு அத்திக்கடை ஜமாத்தார்களின்  அமீரக அத்திக்கடை அசோசியேஷன் பொது குழு கூடியது அதில் சிறப்பு விருந்தினராக அத்திக்கடை ஜமாத் செயலாளர் குத்பு தீன் மற்றும் கொரடாச்சேரி ஒன்றிய உறுப்பினர் அப்துல் முகம்மது வருகைதந்து சிறப்பித்தார்கள்

வெள்ளி, டிசம்பர் 14, 2012

அமீரக அத்திக்கடை அசோஷியேசன்.


அஸ்ஸலாமு அலைக்கும் 


நாம் இங்கு இருக்கும்போதே நாம் பிறந்தமண்ணுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல என்னத்தில் இந்த இயக்கம் இனிதே துவங்கபட்டு உள்ளது  நமதூரை சேர்ந்தவர்கள் உடனே கீழே உள்ள இயக்க செயற்க்குழு உறுப்பினரை தொடர்பு கொண்டு நீங்களும் இனைந்து அமைப்பு வழற்ச்சிக்கு
உதவுமாறு அன்புடன் வேண்டிகொள்கிறோம் 


இப்படிக்கு
ஒருங்கிணைப்பாளர்கள் 
 V.A.முகம்மது ஃபாருக்                  050-6445345
 K.D.சுல்தான் அப்துல் காதர்         055-1123864

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

aramex

aramex
courier day
06.12.2012

------------------------------------------------------------------------------------------------------------------------

           02.12.2012 ஞாயிற்று கிழமை
           மாலை 3.00 மணிக்கு
           நடை   பெற்ற  ஐக்கிய அரப்
         குடியரசின்  41வது சுதந்திரதின
         கொண்ட்டஅணிவகுப்பில் 
          50க்கும்மேற்பட்டaramex
         இருசக்கர வாகணம் 
         கார் மற்றும் 
        வேன்கள்கலந்து 
        கொண்டு சிறப்பித்தது.