வெள்ளி, நவம்பர் 19, 2021

கோயம்பேடு பேருந்து நிலையத்தை புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் மாற்ற திட்டம்





 கோயம்பேடு பேருந்து நிலையத்தை

புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் மாற்ற திட்டம்

2023 ஆம் ஆண்டு மாற்றப்படும்
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்து நிலையம் இயங்கி வந்தபோது வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாநகர எல்லையை தாண்டவும், வெளிமாவட்டங்களில் இருந்து மாநகருக்குள் வரும் பேருந்துகள் பிராட்வேயை அடையவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கால விரயம் ஆகி வந்தது.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், கோயம்பேட்டில் 37 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் இப்பேருந்து நிலையத்துக்கு தினமும் 60 ஆயிரம் முதல் 1.5 லட்சம் பேர்கள் வரை வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாநகரம் விரிவடைந்து வருவதை கருத்தில் கொண்டு வண்டலூருக்கு அருகே கிளாம்பாக்கத்திலும், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திலும் புதிய புறநகர் பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இவற்றில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஓரிரு மாதங்களில் இப்பணிகள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் பின்னர், தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு பயணிக்கு பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக