ஞாயிறு, அக்டோபர் 22, 2023

தஞ்சை ஆம்னி பஸ் ஸ்டாண்ட்

 தஞ்சையில், ஆம்னி பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது


தஞ்சாவூர் நகர் பகுதியில் ஆம்னி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் பிற வாகனங்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

நகர் பகுதியில் ஆம்னி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது வாடிக்கையாக உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அந்த பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது தஞ்சை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சையில், ஆம்னி பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது



ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து பஸ் போக்குவரத்தை
 மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தஞ்சை ஆம்னி பஸ் ஸ்டாண்ட்: அடடே இவ்வளவு வசதி இருக்கா!

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆம்னி பஸ் பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய ஆம்னி பஸ் ஸ்டாண்ட் 5400 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 26 பேருந்துகளை நிறுத்தி வைக்கலாம். தரை தளத்தில் பயண அலுவலகம், 9 கடைகள் மற்றும் ஆண், பெண் என தனித்தனியாக கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், முதல் தளத்தில் 7 கடைகள், தங்கும் அறைகள் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.



கார், பைக் நிறுத்துவதற்கு என பஸ் ஸ்டாண்ட் முன்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றி வர தார் சாலை வசதியுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக