புதன், நவம்பர் 08, 2023

திருவாரூர் ரயில் சந்திப்பு

 


தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர் ரயில் சந்திப்பு 'அமரித் பாரத்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க  பணிகள் சந்திப்பில் நடைபெற்று வருகிறது. 




ரூபாய் 8 கோடியே 36 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் ரயில் சந்திப்பின் கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீனப்படுத்தப்பட உள்ளது.



பயணிகளை ஈர்க்கும் விதமாக  ரயில் சந்திப்பின் முகப்பில் அலங்கார வளைவு,  விசாலமான நுழைவாயில், அனைவரையும் கவரக் கூடிய விதத்தில் இட வசதியுடன் அமையும். மேலும் வாகனங்களை தாராளமாக நிறுத்தும் வாகன காப்பகம்,இடையூறின்றி பாதசாரிகள் நடந்து செல்லும் பாதை, அனைத்து நடைமேடைகளிலும் கூடுதலான இருக்கைகள், குடிநீர் குழாய்கள், பாதுகாப்பான மேற்கூரைகள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் போன்றவை பயணிப் போரை கவரக்கூடிய விதத்தில் அமைய உள்ளது.மாற்றுத்திறனாளிகள் முதியோர் போன்றவர்களுக்கு ஏதுவாக சாய்வு தள பாதையும் அமைக்கப்பட உள்ளது. தவிர பார்வையற்றோர் நடந்த செல்ல ஏதுவாக தொடு உணர்  தரைதளம்(tactile flooring) அமையவும் இரண்டு நுழைவாயில்கள் ஏற்படுத்திடவும் உள்ளது. ஏற்கனவே மூன்று நடை மேடைகளிலும் மின் தூக்கிகள் அமைக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.  அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருவாரூரை இணைத்து மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட  இந்திய ரயில்வே துறை, தெற்கு ரயில்வே, திருச்சி கோட்ட அதிகாரிகள், நாகை நாடாளுமன்ற உறுப்பினர்,  அனைத்து கட்சி அரசியல் ஆளுமைகள், பத்திரிகை ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். 



செயலர் 

முனைவர் பாஸ்கரன்

திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்கம் திருவாரூர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக